

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31:
வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெறும் பிஜே ஹாஃப் மராத்தான் என்னும் நெடுந்தூர ஓட்ட போட்டியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து 8,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அந்த எண்ணிக்கையில் 38 நாடுகளைச் சேர்ந்த 250 பேர் சர்வதேச பங்கேற்பாளர்களும் அடங்குவர் என்று பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து குறிப்பாகச் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்து 7,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதன் மூலம் இம்முறை பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதன் பெட்டாலிங் ஜெயா முகமது ஜஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
“இதன் மூலம் பிஜே ஹாஃப் மராத்தான் 2024ஐ ஒரு மதிப்புமிக்க நிகழ்வாக மாற்றுகிறது. ஏனெனில் இது சர்வதேச ஓட்டப்பந்தய வீரர்களின் பங்கேற்பை வெற்றிகரமாக ஈர்த்தது.
இதில் 30 கிலோமீட்டர் (கிமீ). 21 கிமீ ஓட்டம், 10 கிலோ மீட்டர் ஓட்டம் மற்றும் ஐந்து மற்றும் ஒரு கிலோ மீட்டர் ஓட்டம் என ஐந்து பிரிவுகள் இடம்பெற்றுள்ளன என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நாட்டில் புகழ்பெற்ற 100 பிளஸ் குளிர்பான நிறுவனம் இந்த போட்டிக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளது.