பாலஸ்தீன போராளி மற்றும் நெருங்கிய நண்பரை இழந்து விட்டேன்! டத்தோஸ்ரீ அன்வார் துயரம்!

கோலாலம்பூர் ஜூலை 31-
உண்மையான நண்பரையும் பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக போராடிய அறப் போராளியையும் நான் இழந்து விட்டேன் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

ஈரானில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்.

இஸ்மாயில் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இது ஒரு கொடூரமான செயல் என்று விவரித்தார்.

மேலும் என் நெருங்கிய நண்பரையும் பாலஸ்தீன மக்களின் உண்மையான போராளியையும் தாம் இழந்து விட்டதாக அவர் கூறினார்.

40,000க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற இஸ்ரேலிய ஆட்சியின் கொடூரமான செயலுக்கு முடிவுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தைகளைத் தடம்புரளச் செய்வதே இந்த கொடூரமான செயலுக்கு காரணம் என்று இது தெளிவாக காட்டுகிறது.

இந்த கொலை குறித்து யாரும்கேள்வி கேட்க மாட்டார்கள். தங்களையும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த படுகொலைகள் நடக்கிறது.

இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles