சமூக தொண்டாற்றிய சரவணன் சின்னப்பனுக்கு டத்தோ விருது!- மணிவண்ணன் வாழ்த்து தெரிவித்தார்

தைப்பிங் மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து 16வது வயதில் தைப்பிங் மணிமன்றத்தில் இணைந்து பிறகு மணிமன்றத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்புடன் பணியாற்றி பயணீட்டாளர் சங்கத்துடன் இணைந்து சங்கத்தின் சட்ட விதிமுறைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்து செயலாற்றி பின் 2008ஆம் ஆண்டில் மலேசிய புறநகர் மேம்பாட்டு இயக்கம் டிரா மலேசியா என்றழைக்கப்படும் இயக்கதிற்கு தலைவராக பொறுப்பேற்று பல சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு பல தரப்பினர்களுடன் இணைந்து வேலை செய்து பின்பு ஆசியா டிரா உதவி தலைவராக நியமிக்கப்பட்டு இன்று உலகளவில் தமிழர்களை ஒன்று சேர்த்து பொருளாதார மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் தி ரைஸ் எனும் எழுமின் இயக்கதின் தோற்றுனர்களில் ஒருவராகவும் ஆசியா பசிபிக் தலைவராகவும் மலேசியாவின் தலைவராக பொறுப்பேற்று சிறப்புடன் சேவையாற்றி இன்று டத்தோ விருது பெற்று பெருமை சேர்த்திருக்கும் சரவணன் சின்னப்பன் அவர்களுக்கு எங்களது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த உயரிய விருதினை சமூகத்திற்காக உழைத்த சரவணன் அவர்களை அங்கீகரித்து வழங்கிய பினாங்கு மாநில அரசாங்கத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


மணிவண்ணன் கந்தசாமி

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles