உலகின் மிகப்பெரிய பேரழிவு முகாமாக காஸா மாறி வருகிறது!

இஸ்தான்புல், காஸா பகுதி “உலகின் மிகப்பெரிய பேரழிவு முகாமாக” மாறி வருவதோடு “ஹிட்லரை மிஞ்சும்” ஒரு அட்டூழியத்தையும் இஸ்ரேல் புரிந்துள்ளது என்று துருக்கிய அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகன் கூறினார்.

உலகில் பாதுகாப்பை உறுதி செய்வதை கடமையாகக் கொண்ட மேற்கத்திய தலைவர்களும் அமைப்புகளும் கிட்டத்தட்ட 300 நாட்களாக இந்த கொடூரத்தை வெகு தொலைவிலிருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தலைநகர் அங்காராவில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால் முழு பிராந்தியத்திற்கும் ஆபத்து விளைவிப்பதைக் காண இன்னும் எத்தனை சிறார்கள் இறக்க வேண்டும்? இது தொடரக்கூடிய பாதையல்ல! என்று அவர் மேலும் கூறினார்.

“கொடூரம் மற்றும் காட்டுமிராண்டித்தனத்தை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles