
கோலாலம்பூர்: ஆக 1-
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மரணம் கோடிக்கணக்கான அறப்போராளிகளை உருவாக்கும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
ஹனியேவின் மரணம் முஸ்லிம் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு என்றாலும் அவரின் போராட்ட உணர்வு என்றும் மறையாது.
அவரின் இழப்பு பாலஸ்தீன மக்களுக்கு வலியைக் கொடுத்தாலும் அவரைப் போல் இன்னும் அறப்போராளிகளை உருவாக்க வழிவகுக்கும் என்றார் அவர்.
பாலஸ்தீனத் தலைவர் மலேசியாவுக்கு வரும்போது எப்போதும் ஆலோசனை வழங்குவார். ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்ட தகவல் தன்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு முறை அவர் இங்கு வரும்போதும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் ஏற்றத் தாழ்வுகளைப் பகிர்ந்து கொண்டதையும் ஜாஹித் தனது பதிவில் தெரிவித்தார்.

