
பூச்சோங், ஆக 2-
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன் நேற்று பூச்சோங் 14 ஆவது மைல் ஸ்ரீ மகா மாரியம்மன் பெருமாள் ஆலயத்திற்கு 50 ஆயிரம் வெள்ளி மானியம் வழங்கினார்.
ஆலயத்திற்கு வருகை புரிந்த அவருக்கு ஆலய நிர்வாகம் பொன்னாடை போர்த்தி மாலைகள் அணிவித்து மரியாதை செய்தது.
பின்னர் ஆலய மேம்பாட்டு பணிகளுக்கு உதவும் வகையில் அவர் 50,000 வெள்ளி மானியம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

