2,000 அமலாக்கப் பணியாளர்களுக்கு RM2.5 மில்லியனை கூடுதல் நேரக் கொடுப்பனவு!

மூவார், ஆகஸ்ட் 1 – இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள சாலைப் போக்குவரத்துத் துறையின் 2,000க்கும் மேற்பட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கு RM2.5 மில்லியனை கூடுதல் நேரக் கொடுப்பனவாக போக்குவரத்து அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

அமலாக்க நடவடிக்கைகளை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக, மற்ற அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் உட்பட, தங்கள் வேலை நேரத்திற்கு வெளியே பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
தகுதியான ஜேபிஜே பணியாளர்களுக்கு விரைவில் இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles