
கோலாலம்பூர்: ஆக 6-
பாரிஸ் ஒலிம்பிக்கின் பூப்பந்து போட்டியில் மலேசிய இளம் வீரர் லீ ஸி ஜியா வெண்கலப் பதக்கம் வென்றார்.நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் லீ ஜீ ஜியா கடுமையான போராட்டத்தில் இந்தியாவின் லக்சன் சென்னை வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
இந்த வெற்றியினால் மலேசியாவிற்கு இரண்டாவது வெண்கலப்பதக்கம் கிடைத்தது.லீ ஜீ ஜியாவின் வெற்றியைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது எக்ஸ் தள பக்கத்தில் TAHNIAH LEE ZII JIA என்று பதிவிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்
நேற்று நடைபெற்ற வெண்கலப்பதக்க ஆட்டத்தில் லீ ஜீ ஜியா இந்தியாவின் லக்சா சென்னுடன் விளையாடினார். 13-21, 21-16, 21-11 என்ற புள்ளி கணக்கில் லீ ஜீ ஜியா வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

