
புத்ராஜெயா:
இலக்கிடப்பட்ட மானியக் குறைப்பு, மின் கட்டணங்களைச் சரிப்பார்ப்பது ஆகியவை அரசு நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எடுக்கும் நடவடிக்கைகள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இதன் மூலம் மலேசிய ரிங்கிட் தொடர்ந்து வலுவடைந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்அரசு தற்போது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மலேசிய ரிங்கிட்டின் நிலையை வலுவடைய செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
“சில உறுதியளிக்கும் செய்திகள் உள்ளன, குறிப்பாக பொருளாதாரத்தின் உள்நாட்டு நிலை மற்றும் ரிங்கிட்டின் வலிமை ஆகியவை கவனம் செலுத்தும் அம்சமாகும்.
கடந்த 14 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது ரிங்கிட்டின் வலிமை தற்போது வலுவடைந்து வருவது நல்ல முன்னேற்றத்தைக் குறிப்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
bernama