தெக்குனும் தெரியாது! பெண் திட்டமும் தெரியாது! சமுதாயத்தின் நிலை பெரும் வேதனையை அளிக்கிறது என்கிறார் டத்தோ இரமணன்

கோலாலம்பூர் ஆக 6-
மடானி அரசாங்கத்தின் மூலமாக இந்திய சமுதாயத்திற்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தெக்குன் ஸ்பூமி மற்றும் அமானா இக்தியார் பெண் திட்டத்தின் மூலம் அதிக அளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பேங்க் ராக்யாட் மூலம் இந்திய தொழில் முனைவோருக்கு பிரிஃப் -ஐ புதிய கடனுதவி திட்டத்தின் வாயிலாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இந்திய சமுதாயத்தின் மத்தியில் இந்த கடனுதவி திட்டங்கள் பற்றி முழுமையாக தெரியவில்லை என்று டத்தோ இரமணன் தெரிவித்தார்.

அண்மையில் பினாங்கு சென்றபோது இந்தியர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திட்டங்கள் குறித்து அவர்களிடம் பேசினேன்.தெரியாது, அமானா இக்தியார் தெரியாது என்கிறார்கள்.மித்ரா தெரியுமா என்று கேட்டபோது அதுவும் தெரியாது என்று சொன்னார்கள்.

அந்த அளவுக்கு நமது பின் தங்கி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது என்று இன்று கோலாலம்பூர் பிரேமேரா தங்கும் விடுதியில் தெங்குன் ஸ்பூமி கடனுதவி திட்டம் குறித்து நேரடி கலந்துரையாடல் நிகழ்வுக்கு தலைமை ஏற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles