நாட்டிற்கு பதக்கங்களை வாரிக்குவித்த கராத்தே விளையாட்டாளர்களின் பயிற்சி மையத்தை உடைத்தது அநியாயம்! டத்தோ டி.மோகன் ஆவேசம்

கோலாலம்பூர் ஆக 7-
சிகாம்பூட் தாமான் ஸ்ரீ சினாரில் மலேசிய ஹயாசி கராத்தே விளையாட்டாளர்களின் பயிற்சி மையத்தின் முன் புறத்தைஇன்று அமலாக்க பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடைத்தனர்.

நாட்டிற்காக பல போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்த கராத்தே விளையாட்டாளர்களை உருவாக்கிய பெருமை இந்த கராத்தே மையத்தைச் சாரும்.

பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கராத்தே பயிற்சி மையத்தை முன் புறம் உடைத்தது அநியாயம் என்று டத்தோ டி மோகன் மிகக் கடுமையாக சாடினார்.

அதிகாரிகள் இந்த பயிற்சி மையத்தை உடைக்க வந்தபோது தடுத்து நிறுத்த டத்தோ டி மோகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கராத்தே விளையாட்டாளர்கள், பயிற்றுநர்கள் போராடினர்.

ஆனால் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இந்த மையத்தின் முன் புறத்தை உடைத்தனர்.

இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று டத்தோ டி.மோகன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இங்கு நடந்த சம்பவத்தை அவர் தனது முகநூலில் நேரடியாக பதிவேற்றம் செய்துள்ளார்.

மிக விரைவில் இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ அலுவலகத்தின் முன் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று டத்தோ மோகன் தெரிவித்தார்.

சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் தொகுதியிலேயே கராத்தே விளையாட்டாளர்களின் பயிற்சி மையத்தை உடைத்தது மிகப்பெரிய அநியாயம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles