
கோலாலம்பூர் ஆக 8-
சிகாம்புட்டில் ஏறக்குறைய கடந்த 30 ஆண்டுகாலமாக மிகச் சிறப்பாக செயல் பட்டு வந்த கராத்தே பயிலும் பயிற்சி மையம் அரசு அதிகாரிகளால் திடிரென்று உடைத்தெரியப்பட்டது அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது.
இந்த மையத்தில் பயிற்சி பெற்ற பலர் சிறந்த கராத்தே வீரர்களாக உறுவாகியதோடு,
உள்நாடு மற்றும் பன்னாட்டு அளவில் நம் நாட்டுக்காக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று பதக்கங்களை மலேசியாவுக்கு கொண்டு வந்து பெருமை சேர்த்த வீரர்களின் பயிற்சி மையமாக திகழ்ந்து வந்த இந்த மையத்தை உடைத்தது உண்மையில் ஏற்றுகொள்ள முடியாது ஒர் அதிர்ச்சி தரும் சம்பவம் என்று பகாங் மாநில உரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. கணேசன் தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நமது மலேசிய நாட்டில் ஒற்றுமையை வளர்ப்பதிலும், உலக அரங்கில் நாட்டின் பெருமையை நிலைநிறுத்துதிலும் விளையாட்டு துறை பெரும் பங்காற்றி வருகிறது.
இது போன்ற பயிற்சி மையங்கள் இருப்பதால்தான் இளைய தலைமுறை கெட்ட வழிகளில் செல்லாமல் அதற்கு மாற்றாக விளையாட்டு துறைகளில் ஈடுபட்டு நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல குடிமகனாக விளங்க வழி வகை செய்வதோடு இளைஞர்களுக்கு மகிழ்ச்சியையும், உட்சாகத்தையும் கொடுப்பதோடு தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்தி வருங்காலத்தில் மேலும் பல புதிய விளையாட்டு விரர்களை நாட்டிற்காக உருவாக்கித் தரும் களமாக இருந்து வருகிறது.
இளைய தலைமுறையினருக்கான விளையாட்டு மையம் என்பதால் அரசு முதலில் அவர்களுக்கு மாற்று இடத்தை ஏற்படுத்தி கொடுத்தப் பிறகே
தற்பொழுது பயன்பாட்டில் உள்ள மையத்தை உடைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இதுவே முறையான செயல் பாடாக அமைந்திருக்கும்.
கடந்த ஆண்டு பிரதமர் அவர்கள் இளைய தலைமுறையினரிடையே விளையாட்டுத் துறையை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு, கல்வியமைச்சு, உயர் கல்வி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுகளும் ஒன்றிணைந்து முறையாக விளையாட்டு துறையை மேம்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும் என்று கூறியிருந்த வேளையில் இதுபோன்ற மனதை பதர செய்யும் சம்பவம் உண்மையில் இளைய தலைமுறையினரை எதிர்காலத்தில் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதில் பின்னடைவையும் மற்றும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையையும் இழக்க செய்துள்ளது.
ஆதலால் இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தனது கண்டனத்தை திரு கணேசன் பதிவு செய்து உள்ளார்.