
பாரிஸ்: ஆக 8-
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரை இறுதி சுற்றில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் போராடி தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து, இன்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயினை இந்திய அணி எதிர்கொண்டது.
கடுமையான போராட்டத்திற்கு பின்னர் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்னை வீழ்த்தி வெண்கலம் வென்றது.