நாங்கள் சட்டவிரோதம் என்று முத்திரை குத்தினால் சீ போட்டியில் 52 தங்கம் ஆசிய போட்டியில் 5 தங்கத்தை மலேசியா திருப்பிக் கொடுக்குமா? கராத்தே மாஸ்டர் தென்னவன் கேள்வி

கோலாலம்பூர் ஆக 9-
சிகாம்பூட் தாமான் ஸ்ரீ சினாரில் ரூக்குன் தெத்தாங்காவில் இயங்கி வரும் கராத்தே பயிற்சி மையம் சட்டவிரோதமானது என்று இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறுவது பெரும் வேடிக்கையாக உள்ளது.

இந்த இடம் சட்டவிரோதமானது என்றால் இங்கு பயிற்சி பெற்று சீ போட்டியில் 52 தங்கம் மற்றும் ஆசியா போட்டியில் 5 தங்கம் பெற்று தந்த ஹயாசி கராத்தே விளையாட்டாளர்களின் பதக்கங்கள் அனைத்தும் திருப்பி ஒப்படைக்கப்படுமா என்று மலேசிய முன்னாள் கராத்தே வீரரும் மலேசிய கராத்தே நடுவருமான பி. தென்னவன் கேள்வியை எழுப்பினார்.

இந்த கராத்தே பயிற்சி மையம் சட்டவிரோதமானது என்றால் சட்டவிரோதமான மையத்தில் பயிற்சி பெற்று நாட்டிற்கு பதக்கங்களை வாரிக்குவித்த கராத்தே விளையாட்டாளர்களும் சட்ட விரோதமானவர்களா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

அப்படியானால் இந்த கராத்தே விளையாட்டாளர்கள் சீ போட்டி மற்றும் ஆசிய போட்டியில் பெற்ற தங்கங்களை திருப்பி ஓப்படைப்படுமா என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.

30 ஆண்டுகள் மேலாக இந்த கராத்தே பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த கராத்தே பயிற்சி மையத்தில் உருவான ஏராளமான கராத்தே விளையாட்டாளர்கள் பல அனைத்துலக போட்டிகளில் நாட்டிற்கு பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளதை அவரால் மறுக்க முடியுமா.

இன்று திடீரென இந்த பயிற்சி மையம் சட்டவிரோதமான கட்டடத்தில் உள்ளது என்று அவர் கூறுகிறார்.சிகாம்பூட் ஸ்ரீ சீனாரில் உடைக்கப்பட்ட கட்டடம் சட்டவிரோதமானது என்று இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் சொன்னார்.

இந்த ரூக்குன் தெத்தாங்காவில் இயங்கும் கராத்தே பயிற்சி மையத்தின் பக்கத்தில் போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.இந்த மையம் சட்டவிரோதமானது என்றால் போலீஸ்காரர்கள் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள். அப்படி ஒன்றுமே நடக்கவில்லை.


உண்மை என்னவென்பதை புரிந்து கொண்டு ஹன்னா இயோ அறிக்கை வெளியிட வேண்டும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles