
கோலாலம்பூர், ஆக.10
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணனுக்கு மடானி சமூக சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
எப்எம்பிஏ எனப்படும் மலேசிய வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் மலேசிய தொழில்துறை விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் இவ்விருது விழாவிற்கு தலைமையேற்றார்.
இவ்விழாவில் டத்தோ ரமணனுக்கு மடானி சமூக சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருது எனக்கு வழங்கியதற்காக டத்தோஸ்ரீ அப்துல் மாலிக் அப்துல்லா தலைமையிலான எப்எம்பிஏவுக்கு நன்றி. இவ்விருது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
மேலும் இந்த விருது எனக்கும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
அதே வேளையில் மக்களின் நம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்.
இது எனது வாக்குறுதி. இது எப்போதும் நிலையானது.
மலேசிய மடானி கொள்கைக்கு ஏற்ப ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

