
கோலாலம்பூர் ஆக 9-
சிகாம்பூட் தாமான் ஸ்ரீ சினாரில் ரூக்குன் தெத்தாங்காவில் இயங்கும் கராத்தே பயிற்சி மையம் மூலம் தலைசிறந்த கராத்தே விளையாட்டாளர்களை உருவாக்கி வருகிறோம்.
முறையான அனுமதியுடன் இந்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது.
குறைந்த கட்டணத்தில் மாணவர்களுக்கு பயிற்சியை வழங்கி வருகிறோம்..
இந்த கராத்தே பயிற்சி மையத்தை வைத்து கொண்டு நாங்கள் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கவில்லை.
இங்கு கராத்தே பயிற்சி மையம் இயங்குவதற்கு ரூக்குன் தெத்தாங்கா அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த மண்டபத்தின் மின்சார மற்றும் தண்ணீர் கட்டணத்தை மலேசிய ஹயாசி கராத்தே சங்கம் பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறது.
இந்த பயிற்சி மையத்தை வைத்து கொண்டு நாங்கள் வியாபாரம் செய்யவில்லை.
இங்கு மூன்று லட்சம் வெள்ளிக்கு மேல் பயிற்சி மேற்கொள்ள சொந்த பணத்தில் ஜிம் இயந்திரங்கள் வாங்கி போட்டுள்ளோம்.
இங்கு ஜிம்முக்கு வருபவர்களிடம் நாங்கள் கட்டணம் வாங்கவில்லை. .
நாங்கள் நினைத்திருந்தால் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அங்கு ஜிம், நைட் கிளப் மசாஜ் சென்டரை நடத்தி இருக்க முடியும்.
எங்கள் நோக்கம் அதுவல்ல. நாட்டிற்காக தலைசிறந்த கராத்தே விளையாட்டளர்களை உருவாக்குவதே என்று மாஸ்டர் தென்னவன் தெரிவித்தார்.

