ஜொகூர் ஸ்கூடாய் தாமான் யூனிவெர்சிட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்குதுணை அமைச்சர் சின் தோங் மானியம்!

ஸ்கூடாய், ஆக 12-
ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஸ்கூடாய் தாமான் யூனிவெர்சிட்டி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ஆடிமாத திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

அனைத்துலக வாணிப தொழில்துறை அமைச்சின் துணை அமைச்சர் சின் தோங் சார்பில் அவரின் இந்தியர் அரசியல் பிரதிநிதி கண்ணன் கலந்து சிறப்பித்தார்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் கண்ணனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்கந்தார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சின் தோங் தனது சார்பில் ஆலயத்திற்கு மானியம் வழங்கினார்.

ஆலயத் தலைவர் எஸ்.இராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலயத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles