விரைவில் அமைச்சரவை மாற்றமா? எனக்கு எதுவும் தெரியாது என்கிறார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்: ஆக 12-
விரைவில் அமைச்சரவை மாற்றம் நிகழவிருப்பதாகவும் மாநில மந்திரி பெசாராக இருக்கும் ஒருவர் கூட்டரசு நிலையில் அமைச்சராக நியமிக்கப்படவிருப்பதாக வெளிவந்திருக்கும் ஆருடங்களுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்

அமைச்சரவை மாற்றம் குறித்தோ அமைச்சர் நியமனம் குறித்தோ தனக்கு எதுவும் தெரியாது என்று பிரதமர் அன்வார் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்

குறிப்பாக கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சர் வேறு அமைச்சுக்கு மாற்றப்படலாம்.

அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அந்த அமைச்சரின் செயல்திறன் கேள்விக்குரியதாக உள்ளது.

இதனால் அவர் கைவிடப்படுவாரா அல்லது வேறு அமைச்சுக்கு மாற்றப்படுவாரா என கேள்விகள் எழுந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் நிலையில் மீண்டுமொரு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று ஆருடங்கள் வெளியாகிய நிலையில் மலேசிய அரசியல் பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles