கோலாலம்பூர் ஆக 12-
மஇகாவின் தலைமைச் செயலாளராக மஇகா கெடா மாநிலத் தலைவர்டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் நியமனம் பெற்றிருப்பது மஇகா கெடாமாநிலத்திற்கு ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
மஇகா கெடா மாநிலத்தில் இருந்து முதல் நபராக கட்சியின் பெரிய பதவியினை வகிக்கும் முதல் தலைவர் என பெருமைக்குரியவராக இவர் திகழ்கிறார்.
அவரது திறமையினையும் அவரின் அரசியல் ஆளுமையும் உணர்ந்து மஇகாவின் தலைமைச் செயலாளர் பொறுப்பினை வழங்கிய மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ டத்தோ டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு மனமார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் இதன் வழி மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
டத்தோ ஆனந்தன் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ஆசிரியராகவும்,விரிவுரையாளராகவும்,கெடா மாநில தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் செயலாளராகவும்,கல்விமானாகவும் தனது பயணத்தை தொடர்ந்தராவார்.
மறைந்த மஇகாவின் மூத்த தலைவர் டத்தோ வி.கோவிந்தராஜூவின் மூலம் மஇகாவில் இணைந்த அவர்,மஇகா கெடா மாநிலச் செயலாளராக பொறுப்பேற்று அனைவரிடமும் எளிமையாகப் பழகும் குணத்தால் மஇகாவின் கெடா மாநிலத் துணைத்தலைவராகவும்,தொடர்ந்து தலைவராகவும் பொறுப்பினை வகித்து மக்கள் பிரச்சனைகளை நேரடியாக களம் இறங்கி அதில் வெற்றியும் கண்டார்.
அங்குள்ள மக்களின் மனதில் தனக்கு என ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்ட பெருமை இவரையேச் சேரும்.
எம்ஐடியிலும்,செனட்டராகவும் இவர் பொறுப்பினையும் பதவியினைம் வகித்து வந்துள்ளார்.
கெடா மாநில மந்திரி பெசாருக்கு சிறப்பு அதிகாரியாக பொறுப்பினை வகித்து அதில் திறம்பட தனது சேவையினை வழங்கியதன் காரணமாக , நாட்டின் பிரதமருக்கு அரசியல் செயளாளராக பொறுப்பேற்று கட்சிக்கும் சமூகத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளார்.
தேசிய மஇகாவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் இவர் அன்பானவராகவும்,அமைதியானவரகாவும் இவரின் நடவடிக்கை இருப்பதால் அனைவரையும் அரவணைத்து அடுத்த கட்ட பரிமாணத்திற்கு கட்சியை நகர்த்திச் செல்வார் என்ற நம்பிக்கையோடு அன்னாரை வாழ்துவதில் பெருமைப்படுகிறேன்.
இவ்வண்ணம்
அன்புடன்
செபூத்தே
எஸ்.எஸ்.இராமமூர்த்தி .கோலாலம்பூர் ஆக 12-

எஸ்.எஸ்.இராமமூர்த்தி .