இந்தியாவுக்கு 3 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு புதுடில்லி சென்றடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு உற்சாக வரவேற்பு!

புதுடில்லி: ஆக 20-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியாவுக்கான 3 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு புதுடில்லி செனறடைந்தார்.

பிரதமர் சென்ற சிறப்பு விமானம் மலேசிய நேரப்படி நள்ளிரவு 12.17 மணிக்கு புதுடில்லி பாலம் விமானப் படை தளத்தில் தரையிறங்கியது.

மனித வளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம், சுற்றுலா, கலாச்சாரம், கலை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹாசன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஸப்ரூல், மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

இந்தியாவின் ரயில்வே துறை துணையமைச்சர் வி.சோமன்னா, இந்தியாவிற்கான மலேசிய உயர் தூதர் டத்தோ முசாபர் ஷா முஸ்தபா, மலேசியாவுக்கான இந்திய உயர் தூதர் பிஎன் ரெட்டி ஆகியோர் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

பாங்க்ரா நடனத்துடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles