
நாடு முழுவதும் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவாக சிவப்பு அலை வீசுகிறது.
அந்த வகையில் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் எனது வெற்றி உறுதி என்று பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் பாமி பாட்சில் நம்பிக்கை தெரிவித்தார்.
வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் வாக்களிப்பு தினத்தில் பக்கத்தான் ஹரப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் 10 ஆவது பிரதமராக பதவி ஏற்பார்.
வாக்காளர்கள் துணிந்து வாக்களிக்க வர வேண்டும் என்று நேற்றிரவு ஜாலான் கிள்ளான் லாமா தாமான் செந்தோசாவில் நடைபெற்ற தீபாவளி உச்சரிப்பில் கலந்து கொண்ட போது பாமி பாட்சில் உற்சாகத்துடன் இதனைத் தெரிவித்தார்.

லெம்பா பந்தாய் கெஅடிலான் தொகுதி உதவித் தலைவர் எஸ். பக்தவத்சலம், கிளானா ஜெயா கெஅடிலான் தொகுதி தலைவர் பிரவின் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
லெம்பா பந்தாய் கெஅடிலான் மகளிர் அணி பொறுப்பாளர் ஷினா இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய வேளையில் லெம்பா பந்தாய் கெஅடிலான் கிளைத் தலைவர்களான யேமன், ஸ்டார் மணியம் நிகழ்ச்சி வெற்றி பெற ஆதரவு வழங்கினர்.

