

பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜசெக கோட்டை என்று வர்ணிக்கப்படும் ஜெலுத்தோங்கில் பிரபல வழக்கறிஞர் ராயரை எதிர்த்து தேசிய முன்னணி சார்பில் ஐபிஎப் தலைவர் டத்தோ லோகநாதன் போட்டியிடுகிறார்.
கடந்த ஒரு வாரமாக ஜெலுத்தோங் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் களம் இறங்கி அவருக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக ஐபிஎப் இளைஞர் பிரிவு தலைவர் கணேஸ் சம்பந்தன் தெரிவித்தார்.
இது பக்கத்தான் ஹரப்பானின் கோட்டையாக விளங்கினாலும் நாங்கள் இட இடங்களில் ஊடுருவி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம்.
இதனிடையே ஐபிஎப் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ சம்பந்தனின் துணைவியார் டத்தின் ஜெயலெட்சுமியும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக ஜெலுத்தோங்கில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

