தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி மலேசியா, இந்திய வர்த்தக பரிமாற்ற ஆலோசனையை ஆதரிக்கிறேன்: பிரதமர் அறிவிப்பு

புதுடில்லி: ஆக 21-
தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி மலேசியா, இந்திய வர்த்தக பரிமாற்ற ஆலோசனையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன் என்று
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

காலாவதியான நாணய முறையைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக தேசிய நாணயங்களைப் பயன்படுத்தி இந்தியா, மலேசியா வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.

இது தொடர்பில் பேங்க் நெகாரா மலேசியா இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தகத்தை வளர்க்க ரூபாய், ரிங்கிட்டின் பயன்பாட்டை விரிவுபடுத்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

இது சீனா, தாய்லாந்து, இந்தோனேசியாவுடனான மலேசியாவின் வர்த்தகத்தில் ரிங்கிட் மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டதை காட்டுகிறது.

உள்ளூர் கரன்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவுக்கு நான் மிகவும் சாதகமாக பதிலளித்தேன்வ்
உயர்ந்து வரும் உலகளாவிய தெற்கை நோக்கி: மலேசியா-இந்தியாவை மேம்படுத்துதல் என்ற
தலைப்பில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles