கலைஞருக்கு கும்பிடு போடுவது தவறில்லை ஒருவரது காலில் விழுவது தான் தவறு: அதிமுகவுக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை ஆக 21-
கலைஞருக்கு கும்பிடு போடுவது தவறில்லை, ஒருவரது காலில் விழுவதுதான் தவறு என்று அதிமுகவுக்கு தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

அண்ணாமலைக்கு அரசியல் அனுபவம் இல்லை என்றும், கருணாநிதி சிலைக்கு அண்ணாமலை கும்பிடு போட்டு நிற்பதை பார்த்தால் தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறி இருந்தார்.

அதற்கு பதிலளித்து அண்ணாமலை,
கலைஞர் கருணாநிதி ஐயாவிற்கு கும்பிடு போடுவதில் தவறில்லை. காலில் விழுவது தான் தவறு.

ஆர்.பி. உதயகுமாரின் சரித்திரத்தை நான் சொல்கிறேன். சசிகலா முன்பு ஆர்.பி.உதயகுமார் கைகட்டி வாய் பொத்தி மூன்றடி தள்ளி நிற்பார்.

பேசும்போது வார்த்தை அதிகமாக வரக்கூடாது என்பதால் அப்படி நிற்பார். 50 ஆண்டுகளாக அரசியல் வாழ்வில் இருந்த கலைஞருக்கும், பாஜவிற்கும் சித்தாந்த ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் செய்திருக்கக்கூடிய பணிக்காக சாதாரண விவசாயி மகனான 40 வயது உடைய அண்ணாமலை அவரது நினைவிடத்திற்கு சென்று கும்பிடு போட்டு வணங்குவதை நான் பெருமையாகத்தான் கருதுகிறேன்.

எங்கள் கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் கலைஞர் 5 ஆண்டுகள் கூட்டணி அமைத்திருந்தார் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles