எனக்காக தொகுதியை விட்டுக் கொடுத்தார் வான் அஸிஸா! பண்டான் எனக்கு பிடித்தமான தொகுதி!!! ரபிஸி ரம்லி உருக்கம்

பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட போகிறேன் என்று சொன்னதும் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தொகுதியை எனக்காக விட்டுக் கொடுத்தார் என்று கெஅடிலான் தேசிய துணை தலைவர் ரபிஸி ரம்லி தெரிவித்தார்.

20013 இல் பண்டானில் வெற்றி பெற்றேன். 2018 இல் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட்டபோது பண்டானில் மீண்டும் போட்டியிட முடிவு செய்தபோது எனக்காக தொகுதியை டாக்டர் வான் அஸிஸா விட்டுக் கொடுத்து பண்டார் துன் ரசாக்கில் போட்டியிடுகிறார்.

பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் என் மீது அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள்.

இந்தியர்களின் ஆதரவும் பெரும் உற்சாகத்தை அளிக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்றதும் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்குவேன் என்று அவர் சொன்னார்.

பண்டான் ஜெயா வில் உள்ள சிவான் ஆலய வளாகத்தில் நேற்றிரவு நடைபெற்ற தீபாவளி விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரபிஸி ரம்லிக்கு மிகப்பெரிய ஆதரவு வழங்கப்பட்டது.

நாட்டில் மெகா ஊழல்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய ரபிஸி ரம்லி பண்டானில் அமோக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles