

உலு சிலாங்கூர் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால் அது முன்னெடுக்கும் திட்டங்களில் இலவச சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது ஆகியவையும் அடங்கும் என்று உலு சிலாங்கூரில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
தமது இந்த நீண்ட காலத் திட்டத்தின் மூலம் காப்புறுதி பாதுகாப்பை பெற இயலாத மக்களின் சுமையைக் குறைக்க இயலும்.
இதன் காரணமாகவே இலவச மருத்துவ வசதி தேவை என்று நான் வலியுறுத்துகிறேன்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீண்டகால அடிப்படையில் அதாவது 15 ஆண்டுகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.
நமக்கு மன உளைச்சல் குறையும். பிரச்சனைக்கு தீர்வு காணும் பட்சத்தில் நோய்கள் அண்டாது என்று அவர் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பானுக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு வெற்றி பெற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

