

பதினைந்தாவது பொதுத் தேர்தலில் கோம்பாங் நாடாளுமன்ற ங வென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை நன்கொடையாக வழங்கப் போவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
நான் தொடர்ந்து சிலாங்கூர் மாநில
அரசில் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை கோம்பாக் சமூக நிதியில் சேர்க்கப் போவதாக அமிருடின் கூறியுள்ளது தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நேர்மையுடன் சேவையாற்றும் தலைவர் அவர் என்பதை புலப்படுத்துகிறது கோம்பாக் தொகுதி வாக்காளர்கள் கூறுகிறார்கள்.
கோம்பாக் நாடாளுமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அமோக வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

