மைபிபிபி கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டை துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார்!! டத்தோ டாக்டர் லோகபாலா அறிவிப்பு

செ.வே.முத்தமிழ்மன்னன்

கோலாலம்பூர் ஆக 25-
மைபிபிபி கட்சியின் 71 ஆம் ஆண்டு தேசியப் பேராளர் மாநாடு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி புத்ரா வாணிப மையத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது .

துணை பிரதமர் மற்றும் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிந்து இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் நாடு தழுவிய அளவில் 2,000 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காலை 8.00 மணிக்கு மேல் மாநாடு தொடங்குகிறது.
காலை 10.30 மணிக்கு டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த மாநாட்டில் கட்சி சின்னம் உட்பட கட்சியின் சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களின் அங்கீகாரம் இதற்கு பெறப்படும் என்று அவர் சொன்னார்.

நாட்டில் பழமை வாய்ந்த கட்சியாக மைபிபிபி விளங்குகிறது.

இப்போது மைபிபிபி கட்சி புதிய தலைமைத்துவத்தின் கீழ் சிறப்பாக இயங்கி வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி நடக்கும் மைபிபிபி மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று
இன்று மைபிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பின்னர் ஊடகவியலாளரிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, டத்தோ இளையப்பன், செயலாளர் டத்தோஇண்டர் சிங், பொருளாளர் டத்தோஸ்ரீ டல்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்தியா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, தகவல் பிரிவுத் தலைவர் ஸ்டீபன், துணை தகவல் பிரிவு தலைவர் குமார், சிலாங்கூர் மாநில மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட அனைத்து மாநில தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles