சீபீல்டு தமிழ்ப்பள்ளியில் தேசிய மாத தொடக்க விழா- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சிறப்பு வருகை

சுபாங் ஜெயா, ஆக 26- மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை விதைக்கும் நோக்கிலும் தேசிய தின குதூகலத்தில் அவர்கள் பங்கேற்கும் வகையிலும் தேசிய தின மாத கொண்டாட்ட நிகழ்வுக்கு சுபாங் ஜெயா, சீபீல்டு தமிழ்ப்பள்ளி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கி, உரையாற்றிய பிரகாஷ், தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதில் மாணவர்கள் காட்டி வரும் உற்சாகமும் அவர்கள் மனதில் பட்டொளி வீசும் நாட்டுப் பற்றுணர்வும் தம்மை பெரிதும் மனம் நெகிழச் செய்வதாகக் கூறினார்.

மாணவர்கள் தங்கள் படைப்புகள் வாயிலாக காட்டிய சமத்துவம், நாம் அனைவரின் ஒரே இலக்கை, அதாவது சுபிட்சம் நிறைந்த தேசத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles