மக்கள் மனங்களில் பெரிய மாற்றம் தெரிகிறது! பக்கத்தானுக்கு ஆதரவு கூடுகிறது சிலாங்கூர் மந்திரி பெசார் உற்சாகம்

மக்கள் மனங்களில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், ஏனெனில் பக்காத்தான் ஹராப்பான் மீதான வாக்காளர்களின் உணர்வும் ஆதரவும் அதிகரித்து உள்ளது” என்று கோம்பாக் தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நாடு முழுவதும் பக்கத்தான் ஹரப்பானுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

வாக்களிக்க சில நாட்கள் மட்டுமே உள்ளதால்,கோம்பாக் தொகுயியில் வாக்காளர்கள் அவர்களது ஆதரவை அதிகமாக தருவதை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன என்றார்.

இம்முறை கண்டிப்பாக பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றார் அவர்.

பத்து கேவ்ஸ் வட்டாரத்தை சேர்ந்த பிரபல பிரமுகர்கள் டத்தோஸ்ரீ கணேசன் மற்றும் டத்தோ வீரப்பன் ஆகியோரும் பக்கத்தானுக்கு ஆதரவு தெரிவித்து களம் இறங்கி உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles