

கெடா மாநிலத்தில் நேற்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
பண்டார் பாரு கூலிமிற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் நடுவே உறுமி மேளம் தாளத்துடன் அழைத்து செல்லப்பட்டார்.
இந்திய இளைஞர்கள் உருமி மேளத்தை வாசித்தபோது டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும் உற்சாகத்தில் கைத்தட்டி மகிழ்ந்தார்.
இம்முறை கெடா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூடுதல் இடங்களை கைப்பற்றி சாதனைப் படைக்கும் என்று பாடாங் செராயில் போட்டியிடும் கருப்பையா முத்துசாமி தெரிவித்தார்.
நாடு முழுவதும் பக்கத்தான் ஹரப்பானின் சிவப்பு அலை வீசுகிறது.
அந்த வகையில் பாடாங் செராயில் மீண்டும் வெற்றி பெற முடியும் என்று கருப்பையா நம்பிக்கை தெரிவித்தார்.

