வழிபாட்டு தலங்களுக்கு சம்பளத்தை நன்கொடையாக வழங்கும் உறுதிமொழியில் டத்தோ இரமணன் கையெழுத்திட்டார்

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றால் எம்.பி. சம்பளத்தை வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் டத்தோ ரமணன் கையெழுத்திட்டார்.

கடந்த வாரம் அறிவித்தபடி, வழிபாட்டுத் தலங்களுக்கு சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கான உறுதிமொழியை நேற்று கையெழுத்திட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


நாடாளுமன்ற உறுப்பினரானால் சம்பளம், அலவன்ஸ் வாங்க மாட்டேன்.

இது என்னுடைய சொந்த முயற்சி.
“நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் அலவான்ஸ் தொகை மசூதிகள், சூராக்கள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

இதுவே நாட்டுக்கு நான் செய்யும் சேவை என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் அருளால் மக்களின் ஆதரவோடு சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் தக்காத்துக் கொள்ளும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே சுங்கை பூலோ வட்டாரத்தில் மிகவும் பிரபலமான டத்தோஸ்ரீ சுகுமாறன் புதல்வர் திருமணத்திலும் கலந்து கொண்டு டத்தோ ரமணன் மணமக்களை வாழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles