கெப்போங் ஜசெக கோட்டையை கைப்பற்ற தேசிய முன்னணி கடும் போராட்டம்

கடந்த 40 ஆண்டுகளாக ஜசெக வசம் இருக்கும் கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை தேசிய முன்னணி சார்பில் ஒரு பட்டதாரியான Yap Zheng Hoe போட்டியிடுகிறார்.

30 வயதான இவர் கெப்போங் மண்ணின் மைந்தர் ஆவார்.

கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் பல ஆண்டுகளாக இவர் சேவையாற்றி வருகிறார்.

கெப்போங்கில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கெப்போங்கில் புதிய அரசாங்கம் மருத்துவமனை அமைக்க அரசாங்கத்தை வலியுறுத்துவேன்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து இன மக்களுக்கும் சமூக நல உதவிகள் கிடைக்க பாடுபடுவேன்.

எதிர்க்கட்சியால் கெப்போங்கில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது என்று அவர் சொன்னார்.

கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட மக்கள் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே கெப்போங் நாடாளுமன்ற தொகுதியில் 6,000 இந்தியர்களின் வாக்குகள் திரட்டுவதில் கெப்போங் ம இகா தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை தலைவர் தனபாலன் தெரிவித்தனர்.

கெப்போங்கில் மாற்றத்தை ஏற்படுத்த இந்தியர்கள் முன் வர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles