ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் சமய சடங்குகளா? ராஜோ போமோவிடம் விசாரணை!

கோலாலம்பூர் ஆக 29-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில்
நில அமிழ்வு நடந்த இடத்தில் சமய சடங்குகள் நடத்தப்போவதாக கூறிய ராஜா போமோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவுள்ளது.

ராஜா போமோவுக்கு கூட்டரசுப் பிரதேச முஃப்தி அலுவலகம் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.

பிரதமர் துறையின் மத விதகாரங்களுக்கான அமைச்சர் முகமத் நயிம் மொக்தார் இதனை கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்திய பிரஜை விஜயலெட்சுமி புதையுண்டார்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் ராஜா போமோ என்றழைக்கப்படும் இப்ராஹிம் மாட் ஜின் என்பவர் சமய சடங்குகளை நடத்தப் போவதாக நேற்று அறிவித்தார்.

இவரின் இந்த நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியில் தவறான புரிதலையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் கூட்டரசு பிரதேச முஃப்தி அலுவலகம் அவரை அழைத்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles