மஸ்ஜித் இந்தியா பாதுகாப்பு இல்லாத – பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை! போலீஸ் படைத் தலைவர் அறிவிப்பு

கோலாலம்பூர்: ஆக 29-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவை பாதுகாப்பு இல்லாத இடம் அல்லது பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேசிய போலிஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் கூறினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் அடுத்தடுத்து நில அமிழ்வு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.

இதனால் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவிலிருந்து ஜாலான் ராஜா லவுட் வரையிலான 1.4 கிலோ மீட்டர் சாலை மூடப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் புதிய பாதிப்புகளை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சாலையை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சாலை மட்டுமே மூடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கும் அவ்வாறு செய்ய உத்தரவு பிறப்பிக்கவில்லை.

வணிகம் நிறுத்தப்படவில்லை, பரிவர்த்தனைகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த பகுதியில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நில அமிழ்வு குறித்து முழு ஆய்வுகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆகையால் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவை பாதுகாப்பு இல்லாத இடம் அல்லது பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles