ரஹ்மா திட்ட நிதி அளிப்பு கட்டம் 3இன் விநியோகத்தில் 85 லட்சம் மக்கள் பயனடைவர்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29-
அரசாங்கத்தின் ரஹ்மா திட்ட நிதி அளிப்பில் பதிவிலுள்ள 85 லட்சம் பெறுநர்களுக்கு நிதி எதிர்வரும் வியாழன் முதல் விநியோகிக்கப்படும்.

இத்திட்டத்திற்கான RM1.7 பில்லியன் நிதியை ஒவ்வொரு பிரிவை சார்ந்தவருக்கும் பதிவுக்கு ஏற்றவாறு தொகை வழங்கப்படும்.

பெறுநர்களுக்கு கூடிய பட்ஷம் RM650 வரை பணம் வழங்கப்படும் என நிதி அமைச்சம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே பதிந்துக் கொண்ட நிதி பெறுநர்களுக்கு ஆகஸ்ட் 29 அன்று வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும். அதே நேரத்தில் புதிய பெறுநர்கள் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களுக்கான பண விநியோகம் செப்டம்பர் 18 அன்று தொடங்கும்.

“தற்போதுள்ள பயனாளிகள் மற்றும் புதிய பெறுநர்கள் அல்லது அத்திட்டத்தின் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட மேல்முறையீடு செய்தவர்களின் வங்கிக் கணக்குகளில் 3ஆம் கட்டத்திற்கான பணம் செலுத்தப்படும்.

“வங்கி கணக்கு இல்லாத பெறுநர்கள் பேங் சிம்பானான் நேஷனல் வங்கியில் ரொக்கமாகப் பணத்தைப் பெற்று கொள்ளலாம்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாண்டு முதல் ரஹ்மா ரொக்க உதவிக்கான பதிவை ஆண்டு முழுவதும் நடத்தும் அணுகுமுறையை அரசாங்கம் கொண்டுள்ளது.

இதன் மூலம் அதிகமான மக்கள் பயனடையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles