
ஈப்போ, ஆக. 29-
சுங்கை வட்டாரத்தில் அமைந்துள்ள 2000 ஏக்கர் கல்வித் தோட்டம், பேராக் மாநில இந்தியர்களின் சொத்துடையாகும்.
இத்தோட்டம் எந்தவொரு தனிநபர், கட்சி அல்லது இயக்கத்திற்கு சொந்தமானது என்பதனை முதலில் உணர வேண்டும் என்று பேராக் மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் 5 இயக்குநர்களை சந்தித்தபோது பேராக் மாநில இந்திய சமூகநலத்துறை, மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்த 2,000 ஏக்கர் கல்வித்தோட்டம் குறித்து நூல் எழுதி நேரத்தை விரையமாக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
பேராக் மாநில நில பதிவதிகாரி வாயிலாக இந்த 2000 ஏக்கர் நிலம் மீது “கேவிட்” போட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணம் தம்மிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வாரியத்தின் நிர்வாகத்தினர் கடந்தாண்டு கணக்கறிக்கையை மாநில அரசுவிடம் வழங்கினர்.
இவர்களை போல் சீனப்பள்ளி மற்றும் இஸ்லாமிய தாபிஸ் பள்ளி நிர்வாகத்தினர் தங்கள் கணக்கறிக்கையை வழங்கினார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கணக்கறிக்கையை இந்த வாரியத்தினர் செலுத்தும்படி வலியுறுத்தப்படுவதாக அவர் கருத்துரைத்தார்.
இனிவரும் காலங்களில் மாணவர்களின் கல்வி நிதியுதவி அவர்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக வழங்கப்பட வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தேவையை அறிந்து வழங்குவது மேலும் சிறப்பாகும்.
கடந்த காலம் போல் பெற்றோர்களிடம் நிதியுதவி வழங்குவதை தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் பேராக் மாநில அரசுவின் வாயிலாக நிதியுதவி வழங்கபடுவது அவசியமாகும்.
இத்தோட்டத்தின் வாயிலாக கிடைக்கப்பெறும் வருமானத்தை கொண்டு பேராக் மாநிலத்தின் அனைத்து இந்திய மாணவர்களுக்கு நிதியுதவி கிடைக்கப்பெற உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இச்சந்திப்பில் வாரியத்தலைவர் எஸ். முணியான்டி, தில்லைநாதன், கே.நாச்சிமுத்து, டத்தோ வ.இளங்கோ மற்றும் எஸ். ஜெயகோபி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

