
மா பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஆக 29-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் ஏற்பட்ட நில அமிழ்வில் புதையுண்ட இந்திய பிரஜை விஜயலெட்சுமியை தேடுதல் பணி குறித்த அண்மையத் தகவலைப் பெறுவதற்காக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசுஃப் நேற்று இங்கு நேரடியாக வருகை மேற்கொண்டார்.
செய்தியாளர்களை சந்தித்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ பாடிலா யூசோப் தேடும் பணிகள் தொய்வின்றி நடைபெற ஜாலான் மஸ்ஜித் இந்தியா முதன்மை சாலை மூடப்படும் என்று அவர் கூறினார்.
மேலும், தீயணைப்பு வீரர்கள், கழிவு நீர் அகற்று வாரியத்தின் ஊழியர்கள், கோலாலம்பூர் மாநகராட்சி பணியாளர்கள் இங்கு இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்.
அங்கு அணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறையினர் தேடுதல் பணியைத் துரிதமாகச் செயல்படுத்தி வருவதை கண்டு தாம் மன நிறைவு கொண்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் குறிப்பிட்டார்.

