25 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்காவ்ஃபோல்டிங் துறையில் சாதிக்கும் இந்தியர் நிறுவனம் லின்சுன் பொறியியல் நிறுவனம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் -ஆக 30
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்காவ்ஃபோல்டிங் துறையில் இந்தியர் நிறுவனமான லின்சுன் பொறியியல் நிறுவனம் சாதித்து வருகிறது.

சுக்கிம் எனப்படும் மலேசிய இந்தியர் விளையாட்டு கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி. மோகன் கூறினார்.

மலேசிய மாஸ்டர் பில்டர்ஸ் சங்கத்தின் சிறப்பு கட்டுமான துறை கண்காட்சி கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கட்டுமானம் தொடர்புடைய நிறுவனங்கள் இங்கு கண்காட்சி கூடங்களை அமைத்துள்ளன.

இக்கண்காட்சியில் இடம் பெற்ற இந்தியர் நிறுவனமாக லின்சுன் பொறியியல் நிறுவனம் விளங்குகிறது.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்காவ்ஃபோல்டிங் துறையில் இந்நிறுவனம் சாதித்து வருகிறது.

குறிப்பாக இன்று அந்நிறுவனம் ஃபோல்ஸ்வொர்க் சோரிங் எனும் புதிய கட்டுமான துறை தொடர்பான பொருளை அறிமுகம் செய்துள்ளது.

கடந்த காலங்களில் இது வெள்ளைக்காரர் நிறுவனங்களில் தான் இருக்கும். இப்போது லின்சுன் பொறியியல் நிறுவனத்தின் அது உள்ளது.

ஃபோல்ஸ்வொர்க் சோரிங் மலேசிய கட்டுமான துறைக்கு பெரும் பயனாக இருக்கும்.

லின்சுன் பொறியியல் நிறுவனத்தின் ஃபோல்ஸ்வொர்க் சோரிங் அறிமுக விழாவிற்கு தலைமையேற்ற டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.

இந்நிகழ்வில் லின்சுன் பொறியியல் நிறுவனத்தின் இயக்குநர்கள் டத்தோ சதிஸ்குமார், டத்தோ நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles