
கோலாலம்பூர் ஆக 30-
ஜாலான் மஸ்ஜித் இந்தியா சம்பவத்தால் வியாபாரம் 50 முதல் 70% வியப்புரம் பாதிக்கப்பட்டிருந்தால் வணிகர்கள் பெரும் கவலையை அடைந்துள்ளனர்.
இதனால் பல வணிகர்கள் தங்கள் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைப்பாதை சரிந்து விழுந்த சம்பவத்தில் இந்திய பிரஜை விஜயலட்சுமி புதையுண்டார்.
இவரை தேடும் பணிகள் 7ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது.
அதே வேளையில் அப்பகுதியில் அடுத்தடுத்து நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தால் சாலைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மாதுக்கு நேர்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்குப் பிறகு இப்பகுதில் வியாபாரம் 50 முதல் 70 சதவீதம் குறைந்து விட்டது.
இச்சம்பவத்தை அடுத்து மாலையில், நீர் விநியோகம் தடைப்பட்டது, இது கடந்த சனிக்கிழமை வரை நீடித்தது. இதனால் வணிகம் மூடப்பட்டது.
அப்பகுதிக்கு அருகில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நிலைமை மோசமடைந்தது.
அதே வேளையில் நிலைமை இன்னும் சரி வராததால் பல வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர் என்று அப்பகுதியில் வணிகர்கள் கூறினர்.

