நில அமிழ்வால் ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீட்பு நடவடிக்கை பகுதிக்குள் நுழைய வேண்டாம்: பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

கோலாலம்பூர்: ஆக 30-
தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா மீட்பு நடவடிக்கை பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய வேண்டாம் என
டாங் வாங்கி போலிஸ் தலைவர் ஏசிபி ஷுலிஸ்மி அபெண்டி சுலைமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் பாதிக்கப்பட்டவரை தேடல், மீட்பு நடவடிக்கை பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்று போலிஸ் மீண்டும் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

இது தேடுதல் முயற்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

அடுத்தடுத்து நடந்த நில அமிழ்வு காரணமாக ஜாலான் மஸ்ஜித் இந்தியா ஒட்டிய சாலைகள் மூடப்பட்டன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மக்கள் அப்பகுதிக்குள் நுழைவதைத் தவிர்க்க வேண்டும்.

காவல்துறையினரின் அறிவுரைக்குக் கீழ்ப்படியுமாறு அனைவருக்கும் அறிவுறுத்த விரும்புகிறேன்.

அனுமதிக்கப்படாத பகுதிக்குள் யாரும் தன்னிச்சையாக செல்ல வேண்டாம் என்று அவர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles