சுதந்திர உணர்வு ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்கிறது – மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பெருமிதம்!

மாலிம் நாவார்,ஆக31 இவ்வாண்டின் சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் கருப்பொருள் மலேசியர்களிடையே ஒற்றுமை உணர்வை மேலோங்க செய்வதோடு பல்லினம் வாழும் இந்நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் பேணிகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டிருப்பதாக மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பவானி ஷாஷா குறிப்பிட்டார்.

நம் முன்னோர்களின் அர்ப்பணிப்பும் தியாகவும் நமது இன்றைய அமைதியான மற்றும் சுதந்திரமான வாழ்க்கைகான மூலதனமாக திகழ்வதாகவும் கூறிய அவர் ஒவ்வொரு மலேசியரும் நம் நாட்டை நேசிப்பதோடு நாட்டின் மீது அன்பும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறினார்.

நாடு 31 ஆகஸ்டு 1957இல் நமக்கான சுதந்திரம் எளிதாக கிடைத்துவிடவில்லை.நம் முன்னோர்களின் சுதந்திர உணர்வாலும் போராட்டங்களாலும் தான் அது சாத்தியமானது.இன்றைக்கு நாம் யாருக்கும் அடிமையாக இல்லாமல் சுதந்திரமாக சொந்த நாட்டில் சிறகை விரித்து மகிழ்ச்சியாக வாழ அவர்கள் விதைத்த விதைதான் விருட்சமாக உள்ளது எனறார்.

அதேவேளையில்,நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும் சரியான இலக்கில் உள்ளது.மலேசியர்கலின் ஒற்றுமையும் புரிந்துணர்வும் நம் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வித்திடுவதாகவும் கூறிய அவர் பல்லினம் வாழும் இம்மண்ணின் வெற்றி நமது ஒற்றுமையிலிருந்தே சாத்தியமாவதாக குறிப்பிட்டார்.

மேலும்,நம்மிடையே உருபெற்றிருக்கும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தொடர்ந்து வலுப்பெற வேண்டும்.மதம்,இனம்,மொழி கடந்து மலேசியர்கள் என்னும் உன்னத சிந்தனையோடு நாம் உயிர்பெற வேண்டும் என்றும் நினைவுறுத்தினார்.

மலேசியர்கள் நாட்டின் மீது விசுவாசம் கொண்டவர்கள்.இங்கு வாழும் பல்லினமும் மலேசியர் என்னும் சிந்தனையால் உயிர்பெறுகிறார்கள்.நாம் மலேசியர் என்று பெருமையோடும் கர்வத்தோடும் சொல்லிக் கொள்ளவதில் அகம் மகிழவும் வேண்டுமென சுதந்திர நாளை முன்னிட்டு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles