
புத்ராஜெயா, செப் 9: ஆகஸ்ட் 25 முதல் 31 வரையிலான 35வது தொற்றுநோயியல் வாரத்தில் (ME28) டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தோடு (1,980) ஒப்பிடும்போது 1,765ஆக குறைந்துள்ளது. மேலும், இக்காலக்கட்டத்தில் நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 80,201 டிங்கி சம்பவங்கள் பதிவான நிலையில்
இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 96,572ஆக உள்ளது என்று சுகாதார இயக்குநர்
ஜெனரல் டத்தோ டாக்டர் முஹம்மது ராட்ஸி அபு ஹாசன் தெரிவித்தார்.
இவ்வாண்டு 88 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 இல் 57 இறப்புகள்
மட்டுமே பதிவாகி இருந்தன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

