பேரா மாநில ஜசெக துணைத்தலைவராக மீண்டும் தேர்வானது பெரும் உற்சாகத்தை அளிக்கிறது! பத்து காஜா எம்பி சிவகுமார் அறிவிப்பு

செ.வே.முத்தமிழ்மன்னன்

ஈப்போ செப் 9-
பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் மீண்டும் பேராக் மாநில ஜசெக துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் போலவே நடப்பு உதவித் தலைவரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் மீண்டும் உதவித் தலைவராக போட்டியின்றி தேர்வானார்.

புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் பேராக் மாநில துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே
பேராக் ஜசெக துணைத் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு
சிவகுமார் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

குறிப்பாக பேராக் மாநிலத்தில் உள்ள டிஏபி தோழர்களின் உறுதியான ஆதரவிற்கு நெகிழ்ந்து போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த மறு நியமனம் குறித்து நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன். இது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பு என்று சிவகுமார் கூறினார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் டிஏபியில் உள்ள மற்ற கட்சி உறுப்பினர்களும் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் பெற வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles