புத்ராஜெயா, செப்.9 – மைகார்ட் அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் அச்சிடுதல் மலேசியாவில் மட்டுமே செய்ய முடியும் என்று தேசிய பதிவுத் துறை (ஜேபிஎன்) வலியுறுத்தியுள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் மலேசிய குடிமக்கள் முதல் முறையாக (12 வயதில்) மைகார்ட் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க, சேதமடைந்த அல்லது இழந்த அடையாள அட்டையை மாற்ற வேண்டும் என்றால் அவர்கள் மலேசியா திரும்ப வேண்டும் என்று ஜேபிஎன் கூறியது.
“பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், பொது ஒழுங்கைப் பேணுவதற்கு அவர்கள் படிக்கும் மற்றும் பெறும் ஒவ்வொரு செய்தியையும் ஆய்வு செய்யுமாறு பொதுமக்களுக்கு நினைவூட்ட படுகிறது” என்று ஜேபிஎன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மேல் தகவல்களுக்கு 03-8880 7077 என்ற எண்ணில் ஜேபிஎன் அழைக்கவும். மேலும், ஏதேனும் விசாரணைகள் அல்லது தகவலைச் சரிபார்க்க pro@jpn.gov என்று முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.