
ஷா ஆலம், செப் 11-
சிலாங்கூரில் மொத்தம் 226 குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது
மழலையர் பள்ளிகள் இன்னும் சமூக நலத்துறையிடம் (ஜேகேஎம்) பதிவு
செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது மழலையர் பள்ளிகளை உடனடியாக
பதிவு செய்ய ஊக்குவிப்பதற்காக தனது தரப்பு இப்போது தீவிரமாக செயல்பட்டு
வருவதாக ஜே.கே.எம் சிலாங்கூரின் தலைமை உதவி இயக்குனர் ரோஜியா உஸ்மான்
கூறினார்.
குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் மழலையர் பள்ளிகளை நடத்துபவர்களுக்கு
எப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜேகேஎம் மூலம் ஆலோசனை கூற
விரும்புகிறேன்.
2025 ஆம் ஆண்டுக்கு பின் சிலாங்கூரில் பதிவு செய்யப்படாத குழந்தை
பராமரிப்பு மையங்கள் அல்லது மழலையர் பள்ளிகள் இருக்காது என்று நாங்கள்
நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.

