தாய்மொழிப் பள்ளி மாணவர்கள் மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவதில் எந்தப் பிரச்சனையையும் எதிர்நோக்கவில்லை

புத்ராஜெயா: செப் 13-
தாய்மொழிப் பள்ளி மாணவர்கள் மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இன்று தெரிவித்தார்.

சீன தனியார் இடைநிலைப் பள்ளிகள் போன்ற தாய் மொழிப் பள்ளிகளின் மாணவர்கள் மலாய் மொழியில் தேர்ச்சி பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்வதில்லை.ஏனெனில் அவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு அணுகுமுறைகளை எடுத்துள்ளது.

சீன ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களிடையே மொழியின் தேர்ச்சியை வளர்ப்பதற்காக மாணவர் மன்றப் போட்டிகள், மொழி, இலக்கிய விழாக்களில் பங்கேற்க பள்ளிகளை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.

கடந்த 1992ஆம் ஆண்டு முதல் டேவான் பஹாசா டான் புஸ்தாகா ஏற்பாடு செய்த திட்டத்தில் கடந்த ஆண்டு 295 மாணவர்களுடன் ஒப்பிடுகையில்,

இந்த ஆண்டு மட்டும் 305 மாணவர்கள் மன்றப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் மொழி மற்றும் இலக்கிய விழாவைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு 493 பேருடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 645 பேர் அதில் கலந்து கொன்டுள்ளனர்.

இது வரலாற்றில் மிக உயர்ந்த பங்கேற்பாகும், மேலும் இந்த முயற்சி தொடரும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles