
காளிதாஸ் சுப்ரமணியம்
கோம்பாக், செப் 13-
எங்களுடைய ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் சட்டவிரோதகமாக நுழைந்து மணல் தோண்டும் கும்பல் நடவடிக்கையை தொடர்பாக பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.
விவசாய நிலத்தில் அத்துமீறி மணல் தோண்டியதால் இப்போது எங்கள் நிலம் பெரும் குட்டைகளாக காட்சி அளிக்கிறது அவர் கூறியுள்ளார்.
கோம்பாக் வட்டாரத்தில் கம்போங் புசுவிலுள்ள நிலத்தில் கும்பல் ஒன்று அத்துமீறியதுடன் அங்குள்ள மண்ணை தோண்டி எடுத்ததுடன் மணலையும் தோண்டி நிலைத்தையே நாசப்படுத்தியுள்ளது .
நிலத்தின் உரிமையாளர் நோர் ஹைமான் சக்குவான் கூறுகையில் தனக்கு தெரியாமல் இந்த நடவடிக்கை நடந்துள்ளதாகவும் அங்கிருந்த கும்பல் தன்னை சொந்த தோட்டத்திற்குள் நுழையும் விடவில்லை என்றார்.
காவல் நிலையத்திலும் நில அலுவலகத்திலும் புகார்கள் செய்தும் இதுவரை இந்த விவகாரம் விசாரணையில்தான் இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார்.
எங்களுக்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் நிலத்தில் பெரிய அளவிலான பல குட்டைகள் தோண்டப்பட்டுள்ளது.
அருகிலுள்ள மற்றொரு நிலத்திலும் தற்போது மண் தோண்டப்பட்டு வருகிறது.
பல புகார்கள் செய்யப்பட்டிருந்தபோதும் மண்ணை தோண்டும் நடவடிக்கைகள். நிறுத்தப்படவில்லை.
என் தோட்டத்தில் மண்ணை தோண்டிய கும்பல்கள் என்னை குண்டர் கும்பலை வைத்து மிரட்டி வருகிறது என்றார்.
தற்போது என் நிலத்தில் விவசாயம் மட்டுமின்றி எந்த நடவடிக்கையும் செய்ய முடியாது.
ஆழமான குட்டைகள் தோண்டப்பட்டுள்ளது. ஆகையால் இந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்பட்டு அதற்கான நஷ்ட ஈடும் வழங்கப்பட்ட வேண்டுமென அவர் முறையிட்டுள்ளார்

