சுதந்திரத்தின் உன்னதம் மாணவர்களிடையே உயிர்ப்பிக்க வேண்டும் – சிவாலெனின்!!

சிலிம் ரீவர்,செப்13: மலேசியா நமது நாடு.இது பல்லினம் வாழும் புரிந்துணர்வு மிக்க உன்னத நாடு.இந்நாட்டின் சிறப்பும் மேன்மையும் மாணவர்கள் மத்தியில் நன்நிலையில் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்.

நம் நாட்டின் சுதந்திர போராட்டங்களும் அதுசார்ந்த வரலாறும் மட்டுமின்றி அதன் உன்னதமும் மாணவர்களிடையே இப்பருவத்தில் விதைக்கப்பட்டால் தான் வளரும் போது அவர்கள் நாட்டுப்பற்றுடனும் இந்நாட்டை நேசிக்கும் உன்னத மலேசியர்களாகவும் உருவெடுக்க முடியும்.

துரோலாக் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர நாள் நிறைவு மற்றும் மலேசியா நாள் கொண்டாட்டத்தில் ஊராட்சி மன்ற் உறுப்பினரும் எழுத்தாளருமான சிவாலெனின் இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்னதாக மாணவர்கள் கைவண்ணத்தில் ஆசிரியர்களின் வழிகாட்டலில் ஒவ்வொரு வகுப்பறையும் மிக அழகாக நம் நாட்டின் வரலாற்றையும் சுதந்திர முன்னெடுப்புகளையும் நினைவுக்கூறும் வகையில் அமைந்திருந்ததையும் சுட்டிக்காண்பித்த சிவாலெனின் சிறந்த பங்களிப்பினை மேற்கொண்ட மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.

மேலும்,இப்பள்ளி தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் இம்மாணவர்களை சிறந்த இலக்கை நோக்கி கொண்டுச் செல்வதை காணும் போது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருபதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமையுரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் திரு.எடிசன் சுமார் ஒரு மாத காலமாய் சுதந்திர மாதத்தை முன்னிட்டு பள்ளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தேறியதை நினைவுக்கூர்ந்தார்.

மாணவர்களின் படைப்புகளும் ஆசிரியர்களின் ஊக்கமும் பெரும் நிறைவாக அமைந்திருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

முன்னதாக சுதந்திர மாதத்தை முன்னிட்டு ஊர்வலம்,ஓவியப்போட்டி,வர்ணம் தீட்டுதல்,தேச உணர்வு பாடல் பாடுதல்,வகுப்பறைகளை அலங்கரித்தல் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தேறிய நிலையில் அதற்கான பரிசுகளையும் சிவாலெனின் எடுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles