

கோலாலம்பூர் செப் 13-
மலேசியாவை உலகளாவிய வணிக நிகழ்வுகளின் மையமாக உயர்த்த உறுதி பூண்டுள்ளேன் என்று MyCEB எனப்படும் மலேசிய மாநாட்டு மற்றும் கண்காட்சி பணியகத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் தெரிவித்தார்.
பத்து காஜாவின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், மலேசியாவின் பிரதமர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த பதவியை வழங்கியதற்கு மனமார்ந்த நன்றிகள்.
30 ஆகஸ்ட் 2024 முதல் மலேசிய மாநாட்டு மற்றும் கண்காட்சி பணியகத்தின் (MyCEB) தலைவராக எனது நியமனம் நடப்புக்கு வருகிறது.
இந்த நியமனம் தொடர்பில், MyCEB நாட்டின் அபிலாஷைகளுக்கு ஏற்ப மிகவும் முன்னேறிச் செல்வதையும், சுற்றுலாத் துறையிலும் நாட்டின் பொருளாதாரத்திலும் பொதுவாக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன்.
MyCEB இன் புதிய தலைவராக, சர்வதேச அளவில் வணிக நிகழ்வுகளுக்கான முக்கிய இடமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்த நான் உறுதிபூண்டுள்ளேன் என்று அவர் சொன்னார்.
ஒரு குழுவில் வலுவான ஆதரவுடன், சர்வதேச அரங்கில் மலேசியாவின் வணிக சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தேசியப் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் MyCEB ஐ அதன் இலக்குகளை அடைய நான் வழிநடத்துவேன் என்று பெரிதும் நம்புகிறேன் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

